Saturday, 19 December 2015

Rajarajeshwari ashtakam with meaning in tamil, k vasantha

நான் படித்தும் கேட்டும் புரிந்து கொண்டவைகளின் தொகுப்பு.
ராஜராஜேஸ்வரி அஷ்டகம்

அம்பா³ சாம்பவி சந்த்³ரமௌலிரப³லா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா- த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
சாவித்ரீ நவயௌவனா சுகரீ ஸாம்ராஜ்யலக்ஷ்மீப்ரதா³
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 1


இந்த உலகத்திற்கெல்லாம் தாயானவளும், சம்பூ என்றும் பெயர் கொண்ட சிவனின் மனைவியும், பிறைச் சந்திரனைத் தலையில் சூடியவளும், தவம் செய்யும் காலத்தில் இலைகளைக் கூடச் சாப்பிடாதவளும், ஆகிய அந்தத் தாய், பார்வதி, உமா, காளி, ஹைமவதி, சிவா என்று அழைக்கப் படுகிறாள். மூன்று கண்களை உடையவளாதலால் காத்யாயனீ, பைரவீ, சாவித்ரீ என்றும் அழைக்கிறார்கள். என்றும் மாறாத இளமையுடன் இருப்பவளும், சுபத்தைத் தருபவளும், சகல விதமான ஐஸ்வர்யங்களைத் தருபவளும், நிரந்தரமானவளும், பரமானந்தத்தைத் தரக்கூடியவளுமாகிய நீயே அனைத்திற்கும் மேலானவள். எல்லா தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் மேலானவள்.  இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும்.

அம்பா³ மோஹினி தே³வதா த்ரிபுவனீ ஆனந்த³ஸந்தா³யினீ
வாணீ பல்லவபாணிவேணுமுரளீ கா³னப்ரியா லோலினீ
கல்யாணீ உடு³ராஜபி³ம்ப³ வத³னா தூம்ராக்ஷஸம்ஹாரிணீ
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 2


இந்த தேவிக்கு மோஹினீ என்றும் பெயர் உண்டு. மூவுலகத்திலும் இருப்பவள், ஆனந்தம் தருபவள். வாயிலிருந்து வரும் பேச்சும், பாட்டும் ,கிருஷ்ணனின் கையில் உள்ள வேணுவின் நாதமும் அன்னை தான். அவளின்றி அணுவும் அசையாதல்லவா? கல்யாணீ எனப்படும் இந்த அன்னை தூம்ராக்ஷசனை வென்றவள் அந்த தேவியின் முகமானது முழுமதியைப் பிரதிபலிக்கிறது. பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும். 

அம்பா³ நூபுரரத்னகங்கணதரீ கேயூரஹாராவலீ
ஜாதீசம்பக வைஜயந்திலஹரீ த்³ரைவேயகை ரஞ்ஜிதா
வீணாவேணு வினோத³மண்டி³தகரா வீராஸனே ஸம்ஸ்தி²தா
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 3


அன்னையின் காலிலே ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கொலுசு, கேயூரமாலை, மணந்தரும் மல்லிகை, செண்பகம் போன்ற மலர் மாலை, முத்து, பவள மாலை, கையில் வீணை,  சந்தோஷத்தைத் தரும் வேணுவுடன், வெற்றியைப் பறை சாற்றும் வீர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் . பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும். 

அம்பா³ ரௌத்³ரிணி த்³ரகாளீ ³³ளா ஜ்வாலாமுகீ² வைஷ்ணவீ
ப்³ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரனுதா தே³தீ³ப்யமானோஜ்வலா
சாமுண்டா³ ஶ்ரிதரக்ஷபோஷஜனனீ தா³க்ஷாயணீ வல்லவீ
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 4


கோபத்தின் உச்ச நிலையில் இவள் பத்ரகாளி. பகளா, ஜ்வாலாமுகி, வைஷ்ணவீ, ப்ராஹ்மணீ அனைவரும் இவளே தான். இந்த உலகை அழிப்பவளும், தேவர்களால் வணங்கப்படுபவளும், ஆகிய. இவள் தான் “சாமுண்டீ” என்றும் அழைக்கப் படுகிறாள். அஸுரர்களை அழித்து அனைவரையும் காத்துக் காப்பாற்றும் இவளே அந்த “ஸதீ” அல்லது “தாட்க்ஷாயணி”. பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும். 

அம்பா³ சூலதனு: குசாங்குசரீ அர்த்தேந்து³ பி³ம்பா³ரீ
வாராஹீமதுகைடபப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா
மல்லாத்³யாஸுர மூகதை³த்யமத²னீ மாஹேஶ்வரீ சாம்பி³கா
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 5


சூலமும், வில்லும், அம்பும், பாசமும், அங்குசமும் கையில் கொண்டு பிறைச் சந்திரனை முன் நெற்றியில் சூடி இருக்கும் இவள் வாராஹி என்றும் அழைக்கப்படுகிறாள். மதுகைடபர்களை வதைத்தவள் இவளே தான் .லக்ஷ்மியும் சரஸ்வதியும் இந்த அன்னைக்குச் சேவை செய்கிறார்கள். மல்லாமூக  அஸுரர்களை அழித்த இவளே “மஹேஸ்வரி” எனப்படும் அந்த தெய்வீகத் தாய். பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும். 

அம்பா³ ஸ்ருʼஷ்டிவினாஶ பாலனகரீ ஆர்யா விஸம்ஶோபிதா
கா³யத்ரீ ப்ரணவாக்ஷராம்ருʼதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருʼதா
ஓங்காரீ வினதாஸுதார்ச்சிதபதா³ உத்³³ண்ட³ தை³த்யாபஹா
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 6


இந்த உலகத்தை உண்டாக்கிக் காத்து அழிப்பவளும் இவளே தான். ஆதி, காயத்ரி, ஓம் என்னும் பிரணவ அட்க்ஷரத்தின் அமிர்தமயமான ரூபம் அனைத்தும் இந்தத் தாய் தான் இந்த விண்ணையும் மண்ணையும் பிரித்தவள். ஓம்காரீ. வினதையின் மகனான கருடனை பாதத்தில் ஆபரணமாக அணிந்தவள். அஸுரராகிய கொடியவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பவள்! பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும்.

அம்பா³ ஶாஶ்வத ஆக³மாதி³வினுதா ஆர்யா மஹாதே³வதா
யா ப்³ரஹ்மாதி³பிபீலிகாந்தஜனனீ யா வை ஜக³ன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி³ரேப²ஜனனீ  யா சித்கலா மாலினீ
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 7
 
அழிவில்லாதவள். நிரந்தரமானவள். ஆகம முறைகளால் வணங்கப் படுபவள்.அனைத்திற்கும் மேலான தெய்வம். ப்ரம்மா முதல் ஒரு சிறு எரும்புவரைப் படைத்த ஜகன் மோஹினி. ஐந்துவிதமான பிரணவ அட்க்ஷரங்களை உண்டாக்கியவள். சகல கலைகளையும் மாலையாக அணிந்தவள். பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் மேலான தெய்வமான நீயே இந்த உலகத்தை ஆளும் ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும். 
அம்பா³பாலித பக்தராஜத³னிஶம் அம்பா³ஷ்டகம் : படே²த்

அம்பா³லோலகடாக்ஷவீக்ஷ லலிதம் ஶ்வர்யமவ்யாஹதம்
அம்பா³ பாவன மந்த்ரராஜபட²னாத் அந்தே மோக்ஷப்ரதா³
சித்³ரூபீ பரதே³வதா ³வதீ ஶ்ரீராஜராஜேஶ்வரீ 8

இந்த உலகாளும் தாயை மனதில் நிரந்தரமாக நிறுத்தி, இந்த 8 ஸ்லோகங்களையும் படிப்பவர்களுக்கு அன்னையின் கடைக்கண் கடாக்ஷம் கிடைக்கும், சகல சம்பத்துக்களும் மோட்க்ஷமும் தரக்கூடிய பரமானந்தத்தைத் தரக்கூடிய, அனைத்து தெய்வத்திற்கும் மேலான, அனைவரையும் அனைத்தையும் ஆளுகின்ற நீயே அந்த ராஜராஜேஸ்வரி என்னும் தெய்வமாகும்.

                             ஶ்ரீராஜராஜேஸ்வரி ஷ்டகம் ஸம்பூர்ணம்